ரியல் காஷ்மீர், அய்சால் ‘டிரா’ | ஜனவரி 11, 2019

  • Latest News,Images,Videos & Music going Viral now - Viralcast.io

அய்சால்: ரியல் காஷ்மீர், அய்சால் அணிகள் மோதிய ஐ– லீக் கால்பந்து போட்டி கோல் எதுவுமின்றி ‘டிரா’ ஆனது.

இந்தியாவில் ‘ஐ–லீக்’ உள்ளூர் கால்பந்து தொடர் நடக்கிறது. மிசோரமில் நடந்த லீக் போட்டியில் ரியல் காஷ்மீர், அய்சால் அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியிலும் வீரர்களின் கோல் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. முடிவில், போட்டி கோல் எதுவுமின்றி ‘டிரா’ ஆனது.

இதுவரை நடந்த போட்டியின் அடிப்படையில், சென்னை சிட்டி (11 போட்டி, 24 புள்ளி) முதலிடத்தில் நீடிக்கிறது. இரண்டாவது, மூன்றாவது இடங்களில் முறையே சர்ச்சில் பிரதர்ஸ் (22), ரியல் காஷ்மீர் (22) அணிகள் உள்ளன.

Advertisement